Thursday, August 27, 2015

ஆவணி அவிட்டம்இன்று ரிக் வேதியர்களின் ஆவணி அவிட்டம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,,,,,
கவிதார்க்கிக சிம்மம் ஆச்சார்யாலு
தண்டலம் வேங்கடகிருஷ்ண அய்யங்கார்
அநந்த அய்யங்கார்
சடகோபாலாச்சார்லு
சிங்கப்பிரான் தீட்சிதர்
ஸ்ம்ருதி ஐயன் அய்யங்கார்
நித்யானந்த சாஸ்த்திரி
திருமலை சாஸ்த்திரி
யார் இவர்கள்? ராணி மங்கம்மாள்
காலத்தில் ( 1689 AD - 1704 AD )
ஸ்ரீரங்கம் திருச்சி திருவானைக்காவல்
ஆகிய ஊர்களில் வாழ்ந்த புகழ்மிக்க
வேத விற்பனர்கள்
ராணியின் கட்டளைக்கிணங்க கூட்டப்பட்ட
சதஸில் அன்றைய காலகட்டத்தில் இவர்கள்
எடுத்த முடிவு:
மதுரையில் வாழ்ந்த செளராஷ்டிரர்கள்
ஆவணி அவிட்டம் நாளில் பிரம்ம யக்ஞம்
செய்து முப்புரி நூல் ( பூணல் )
தரித்துக்கொள்ள அவர்கட்கு முழு உரிமை
உண்டு அவ்வுரிமை மறுக்கப்பட நியாயம்
இல்லை
ஆதாரம்
பாகை நாடன் எழுதியுள்ள கதை சொல்லும் கல்வெட்டு

Thursday, February 24, 2011

கனியிருப்ப

இது என் சொந்தப் பங்களிப்பல்ல். சவுக்கு இணையதளத்திலிருந்து இரவல் வாங்கப்பட்டுப் பகிர்தலாகப் படைக்கப்படுகிறது.. தென்னகத்து பூலான் தேவி….
சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 02:07

பூலான் தேவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரசித்திப் பெற்ற கொள்ளைக் காரர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை தென்னகத்து பூலான் தேவியைப் பற்றியது.

அந்தப் பூலான் தேவி, நெருக்கடியால் கொள்ளைக்காரியானவர். இந்தப் பூலான் தேவி, கொள்ளையடித்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர்

அந்தப் பூலான் தேவி, சமுதாயத்தால் வஞ்சிக்கப் பட்டவர்.

இந்தப் பூலான் தேவி சமுதாயத்தையே வஞ்சித்தவர்.

அந்தப் பூலான் தேவி படிப்பறிவில்லாத பாமரர்

இந்தப் பூலான் தேவி படித்துத் தேறிய கவிஞர்

அந்தப் பூலான் தேவி சொந்தக் குடும்பத்தாலேயே வெறுத்து ஒதுக்கப் பட்டவர்

இந்தப் பூலான் தேவி தன் குடும்பத்தால் ஊரை அடித்து உலையில் போட்டவர்.

இந்நேரம் தென்னகத்து பூலான் தேவி யாரென்று கண்டு பிடித்திருப்பீர்களே… ? சவுக்கு வாசகர்கள் அல்லவா… அறிவாளிகளாயிற்றே நீங்கள்.
ஆம் இந்த பூலான் தேவி வேறு யாருமல்ல. கவிஞர் என்ற அடைமொழியோடு வலம் வரும் கனிமொழி தான் அது.

சவுக்குக்கு கனிமொழியை பிடிக்கும். என்ன காரணம் தெரியுமா ? கருணாநிதியின் கயமையும், வஞ்சகமும், மற்ற கெட்ட திறமைகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவர். இவரைப் போல கருணாநிதியின் மற்ற வாரிசுகள் ஒருவரும் இத்தனை திறமை கொண்டவர்கள் அல்ல. அது அழகிரியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஒருவருமே இவர் அருகே நிற்க முடியாது.

கனிமொழியின் பெரிய திறமை என்னவென்றால், தன்னை ஒரு மென்மையான, அப்பாவி கவிஞராக வளர்த்துக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தமிழாசிரியர்கள் பெரும்பாலும், திமுக ஆதரவாளர்களாகவே இருப்பர். தன்னுடைய முதல் கவிதை தொகுதியான கருவறை வாசனைகளை வெளியிட்ட போது, பெரும்பாலான தமிழறிஞர்கள் கனிமொழியை கவிஞராக அங்கீகரித்தனர்.
கருணாநிதி என்ற தன் தந்தையின் நிழலையும் மீறி, கனிமொழி நல்ல கவிஞர் என்பதை பெரும்பாலான கவிஞர்கள் ஒப்புக் கொண்டனர். அதெல்லாம், பெரிய அரங்கேற்றத்திற்கான ஒப்பனைகள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.
கனிமொழியின் பிரபலமான கவிதையான

பள்ளிக்குச் சென்றேன்
தலைசிவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...என்பதையே சற்று பொறுமையாக கவனித்துப் பாருங்களேன். அவரது முறை வந்த போது என்ன செய்திருக்கிறார் என்று.
சவுக்குக்கு கனிமொழியோடு பரிச்சயம் 2002ம் ஆண்டு. குஜராத்தில் நடந்த கலவரங்களைப் பார்த்து, மனசாட்சி உள்ள அத்தனை பேரும் துடி துடித்து நின்ற போது, சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், கோபாலபுரத்தின் நிலைய வித்வான் துரை.ரவிக்குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் பேசினர். கோபாலன் தனக்கே உரிய இயல்பான பாணியில் உணர்ச்சி வயப்பட்டு, ஊடகங்கள் இந்தக் கலவரத்தை கவர் செய்த விதத்தைப் பற்றி கோபப் பட்டார்.
அப்போதுதான் கனிமொழியின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. ஒரு பெரிய பேச்சாளருக்கான சரளமான மொழி நடை இல்லாவிட்டாலும், ஒரு இயல்புத் தன்மை இருந்தது. அப்போதுதான் கனிமொழி மீது மரியாதை ஏற்பட்டது.
சவுக்கைப் போலவே, பல்வேறு நோக்கர்களும், கனிமொழியை அப்படித் தான் கருதியிருந்தார்கள்.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர், நேரடியாக கனிமொழியிடமே, ‘நீங்கள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்றார். அப்படி ஒரு தாக்கத்தை கனிமொழி ஏற்படுத்தி இருந்தார்.

2004 யுபிஏ அரசாங்கத்தில் கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படவில்லை. முதல் யுபிஏ முடியும் முன்பாகவாவது, கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இறுதி வரை கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படாதது, பலருக்கு உண்மையில் கனி மொழி மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தன்னை ஒரு நடுநிலை ஜனநாயகவாதியாக அடையாளம் காட்டிக் கொள்வதற்காக, மற்றொரு அரசியல் வாரிசான, கார்த்திக் சிதம்பரத்தோடு சேர்ந்து, “கருத்து” என்ற இணையதளத்தை தொடங்கி அது கருத்துச் சுதந்திரத்திற்கான களம் என்று அறிவித்தார்.
ஆனால், முதல் யுபிஏ முடியும் முன்னரே, கனிமொழி தன்னை அரசியல் அரங்கில் தனது சகோதரர்களுக்கு இணையாக வளர்த்துக் கொள்வதில் தனது மறுபக்கத்தை காண்பிக்கத் தொடங்கினார். தனக்கென ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வது, தனது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு காரியங்களை முடித்துக் கொடுப்பது, என்பதில் தொடங்கி, போலிப் பாதிரியோடு, சேர்ந்து சென்னை சங்கமம் என்ற நிகழ்சி நடத்துவதில் முடிந்தது. சென்னை சங்கமம் கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நடந்த நிகழ்வு என்றாலும், அதில் கார்ப்பரேட்டுகள் வகித்த பங்கும், தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் உட்பட, அரசு அதிகாரிகளை இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய விதமும், அனைவரையும் முகம் சுளிக்க வைத்து, கனிமொழியின் உண்மையான பூலான் தேவி முகத்தை ஓரளவுக்கு வெளிக் காட்டியது.
ஆனால் இரண்டாவது முறை யுபிஏ அரசாங்கம் பதவி ஏற்ற போதும், கனிமொழிக்கு மந்திரி பதவி இல்லை என்ற விஷயம் கனிமொழி மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. ஆனால், மந்திரி பதவி கிடைக்காததற்குப் பதிலாக கனிமொழி என்னவெல்லாம் செய்தார் என்பதை உலகம் அறிந்த போது, கனிமொழியின் மீது இருந்த அத்தனை பரிதாபமும் வெறுப்பாக மாறியது. குறிப்பாக நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய அத்தனை உரையாடல்களும், இதயத்தை உறையச் செய்யக் கூடியவை. நடுநிலையாளர்களையும், ஜனநாயகவாதிகளையும் பதை பதைக்கச் செய்யக் கூடியவை.
சேற்றில் பூத்த செந்தாமரை என்று அன்று கனிமொழிக்கு பட்டம் கொடுத்த அந்த மூத்த பத்திரிக்கையாளர் நீரா ராடியா உரையாடல்களை கேட்டு, என்ன ஆகியிருப்பார் என்று நினைப்பதற்கே பாவமாக இருக்கிறது.
இதற்குப் பிறகு தான் கனிமொழியின் பூலான் தேவி முகம் வெளி உலகக்கு தெரியத் தொடங்குகிறது.

ஆண்டிமுத்து ராசா, தொலைத் தொடர்பு மந்திரி ஆவதற்கு முன்பாக, இணை அமைச்சராக இருந்த போதே, அரசியல் ஏணியில் முதல் படியை அடைவதற்கு, குடும்பப் படியே சிறந்த வழி என்பதை உணர்ந்தார். இரண்டாவது குடும்பத்தின் படிகள் அல்லக்கைகளால் மிகுந்த நெருக்கடியாக இருந்ததால், மூன்றாவது குடும்பத்தின் படிகளே, முதல் படியை அடைவதற்கு ஏற்ற வழி என்று, சபரி மலை 18 படியைப் போல, மிகுந்த புனிதமாக அந்தப் படிகளை தொழுது, தனது அரசியல் வாழ்வை செழுமையாக்கிக் கொண்டார் ஆண்டிமுத்து ராசா. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் சம்பாதிக்க ராசா தேர்ந்தெடுத்தது, மூன்றாம் குடும்பத்தின் வழியை.
அரசியலிலும் சரி, அதிகார மையத்திலும் சரி, குடும்பத்தின் வழியாக புகுந்து தலைவரின் மனதில் இடம் பிடித்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழியை பொறுத்தவரை, முதல் குடும்பத்திற்கு கிடைக்கும், மரியாதைகளும் சலுகைகளும் தங்களுக்கு கிடைப்பதில்ல என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. இந்த நேரத்தில், ஆண்டிமுத்து ராசா வழியில் ஒரு சரியான அடிமை சிக்கியதும், அகப்பட்டதை சுருட்டலாம் என்று முடிவெடுக்கின்றனர் தாயும் மகளும்.
2ஜி அலைக்கற்றை ஏலத்தில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை, ராசா கருணாநிதியின் உத்தரவோடு பெரும் பங்கை கொடுத்தது சிஐடி காலனியில் உள்ள துணைவியின் இல்லத்தில். இதனால் ராசா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டனர் சிஐடி காலனி மகாராணிகள். இதன் வெளிப்பாடே, ராசாவுக்காக தொடர்ந்து இடை விடாமல் நீரா ராடியாவுடன் பேசியது. எப்படியாவது ராசாவை தொலைத் தொடர்புத் துறை மந்திரியாக

ஆக்க வேண்டும் என்று முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். இந்த முயற்சி எதற்கென்றால், 2ஜி அலைக்கற்றையிலேயே இத்தனை கோடிகள் என்றால், 3ஜி அலைக்கற்றையில் எத்தனை கோடிகள் கிடைக்கும் என்ற நப்பாசையே…!
கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை என்ன செய்வது என்று தெரியாமல், தாறுமாறாக சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நேரடியாக தாய் பெயரிலோ, மகள் பெயரிலோ சொத்துக்களை வாங்கிக் குவித்தால் தெரிந்து விடும் என்பதற்காக, ஒவ்வொரு சொத்துக்கும், ‘சொன்ன படி தலையாட்டும்’ ஆடு ஒன்றை பிடிக்கிறார்கள்.
அந்த ஆட்டின் பெயர் தான் சண்முகநாதன். யார் இந்த சண்முகநாதன். இவர் மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார். இவர் ஷங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், இந்த நிறுவனங்கள் அத்தனையும் செயலிழந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சண்முகநாதன் பெயரில், இந்த சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர், தென்னகத்து பூலான் தேவி குடும்பத்தார்.
முதல் சொத்து… சென்னை அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடம். இந்த சொத்து டாக்டர் கே.சண்முகநாதன் என்பவர் பெயருக்கு 27 ஏப்ரல் 2009 அன்று விற்பனை செய்யப் பட்டதாக மாற்றம் செய்யப் படுகிறது.

இந்தச் சொத்துக்காக சண்முகநாதன் வழங்கியதாக சொல்லப்படும் தொகை, ஏழு கோடியே, 62 லட்சத்து 32 ஆயிரத்து எழுபத்தாறு ரூபாய்.

இந்த பரிவர்த்தனை பற்றிய விரிவான செய்திகளுக்கு, தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையை படியுங்கள்.
இப்போது வெளிச்சத்திற்கு சவுக்கு தனது வாசகர்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வந்திருக்கும் பரிவர்த்தனை, உதகமண்டலத்தில் உள்ள வின்ட்ஸ்ர் எஸ்டேட் என்ற 526 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட்டை வெறும் 2.47 கோடிக்கு வாங்குகிறார் இந்த டாக்டர் சண்முகநாதன். இந்த எஸ்டேட்டின் அசல் மதிப்பு 300 கோடிக்கும் குறையாமல் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த சண்முகநாதன், தென்னகத்து பூலான் தேவி சார்பில் மேலும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சண்முகநாதனை உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட், கடந்த மாதம் 10 முறை சந்தித்ததும், அந்த சந்திப்புகள் ஹோட்டல் அறைகளிலும், சாலையில் செல்லும் போது கார்களிலும், டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சந்துகளிலும் நடைபெற்றிருப்பது, சண்முகநாதனை மேலும் மர்மமான மனிதராக்குகிறது. சிபிஐ அதிகாரிகள் இந்தத் தகவலையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தவிரவும், தென்னகத்து பூலான் தேவி, சிறுசேரி மஹிந்திரா சிட்டியின் பின்புறம் உள்ள கொண்டமங்கலம் என்ற கிராமத்தில் 170 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 230 ஏக்கர்கள் நிலம், பூனாவைச் சேர்ந்த என்.எஸ்.பி பேர்ள் சிட்டி என்ற நிறுவனமும், சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து 14 மாடிகள் கொண்ட, மிகப் பெரிய சொகுசு அடுக்குமாடி வீடுகளை உட்ட உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள். தென்னகத்து பூலான் தேவி என்றால், வெறுமனே சொத்துக்களை வாங்கிக் குவித்தால் மட்டும் போதுமா என்ன ? தொழில் தொடங்க வேண்டாமா ?

அதற்காகத் தான், அலாஃப்ட் என்ற பெயரில், ஐந்து நட்சத்திர ஒட்டல்கள் கட்ட தென்னகத்து பூலான் தேவி திட்டமிட்டுள்ளார். இந்த ஓட்டல் திட்டத்திற்கு சிக்கிய ஆடு, ஆட்டோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் குமார் சீத்தாராமன் என்பவர். இவர் தான் பூலான் தேவியின் ஏஜென்டாக இருந்து செயல்படுகிறார்.
கலைஞர் டிவிக்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் 216 கோடி ரூபாய் வழங்கியது எப்படி வழங்கப் பட்டது என்பது நினைவிருக்கிறதா ? முதலில், டிபி.ரியாலிட்டி, பிறகு டைனமிக்ஸ் ரியாலிட்டி. பிறகு குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடெபிள்ஸ், கடைசியாக சினியுக் பிரைவேட் லிமிட்டெட்.
2000 கோடியை முதலீடு செய்ய பூலான் தேவி தேர்ந்தெடுத்த வழியும் இதுதான். அலாஃப்ட் செயின் ஆப் ஹோட்டல்ஸ் என்று இந்தியா முழுக்க ஓட்டல் கட்ட வேண்டுமென்று திட்டம். எடுத்தவுடன் இந்த நிறுவனம் அத்தனை ஹோட்டல்களையும் கட்டத் தொடங்கினால் சந்தேகம் வருமல்லவா ?
அதற்காக முதலில் மொரீஷியஸைச் சேர்ந்த சிப்பிஐ இந்தியா என்ற நிறுவனம் அர்பன்எட்ஜ் என்ற நிறுவனத்தோடும், ஆரோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தோடு சேர்ந்தும் பல ஹோட்டல்களை கட்ட திட்டமிடுகிறது. இந்த ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் குமார் சீத்தாராமன்.

இதையடுத்து ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனம், ஹோட்டல் கட்டும் பொறுப்பை அத்வைய்யா ஹாஸ்ப்பிட்டாலிட்டீஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது. அதன் படி, முதலில் சோழிங்கநல்லூரில் 120 அறைகளைக் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டலும், பெங்களுருவில் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலும் கடந்த ஜுன் 2010ல் தொடங்கப் பட்டு விட்டன. அடுத்து கோயம்பத்தூரில் வேலைகள் தொடங்கப் பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோவையைத் தொடர்ந்து அகமதாபாத், சண்டிகர், கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், நாக்பூர், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் இதே போல ஹோட்டல்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த குமார் சீத்தாராமனை சிபிஐ பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இது தவிரவும், பூலான் தேவியின் சொத்துக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. விபரங்கள் கிடைத்ததும், அது சவுக்கு வாசகர்களுக்குத் தானே… ?
நன்றி சவுக்கு 19-2-2011

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=433:2011-02-18-20-57-44&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

Wednesday, February 23, 2011

கனியிருப்ப...

19-2-2011 சவுக்கு இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றை இங்கு பகிர்கின்றேன்...........தென்னகத்து பூலான் தேவி….

Sunday, February 20, 2011

ஆணிமுத்து மகனும் அர்ஜுனன் மகனும்...

20 பிப்ருவரி 2011 ஞாயிறு தினமலர் நாளிதழில் இது உங்கள் இடம்
பகுதியில் இடம் பெற்ற கடிதம்:

களப்பலி அரவாண்: கே.இளம்செழியன், இருகூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "யாரையாவது களப்பலி கொடுத்தால் தான், பாரதப் போரில் ஜெயிக்க முடியும்' என, பெரியவர்களும், ஜோதிடர்களும் கூறினர். அர்ஜுனனின் மகனாகிய அரவாணை, இதற்காக தேர்ந்தெடுத்தனர். அவனும் சம்மதித்தான். ஆனால், தான் இறக்கும் முன், எல்லாவித சுக போகங்களையும் அனுபவித்துவிட்டுத் தான் இறப்பேன் என்றான். அதனால், மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணன், அவனை மணந்து கொள்ள, அந்த மோகினியுடன், இஷ்டம் போல சுகித்து மகிழ்ந்தான். இந்த சம்பவத்தை, இன்றும் கூவாகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கு, உலகெங்குமுள்ள அரவாணிகள் வந்து, கூவாகத்தில் கூடுகின்றனர். அதேபோல, வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க, தி.மு.க., அணிக்கு ஒரு அரவாண், களப்பலியாக தேவைப்பட்டான். அதுதான் முன்னாள் அமைச்சர் ராஜா. அவரைக் களப்பலியாக சி.பி.ஐ., சிறையில் அடைத்துவிட்டு, காங்கிரசும், தி.மு.க.,வும், தேர்தல் போரில் ஜெயித்து விடலாம் என திட்டம் வகுக்கின்றன; கனவு காண்கின்றன. ராஜா ஊழல் செய்தார் சரி... ஆனால், அந்த பணத்தில் லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்? ஸ்பெக்ட்ரம் பணம் பாயாத இடம் ஏது?
கூனிக் குறுகி வாழ்வதா?

இக்கடித்திற்கான என் எதிர்வினை:

" அன்று அர்ஜுனனின் மகன் அரவாண் களப்பலி
இன்று ஆணிமுத்து மகன் களப்பலி
ஒப்பீடு என்னவோ உண்மைதான்.
ஆணிமுத்து மகன், அர்ஜுனனின் மகனிடமிருந்து
ஒரு விஷயத்தில் வேறுபடுகிறார்.

அர்ஜுனனின் மகன், தான் களப்பலியாகப்போகிறோம்
என்று அறிந்தபின்னரே மோஹினியை நாடுகிறான்.

ஆணிமுத்து மகனோ மோஹினியை நாடி, அதன் விளைவாகவே
களப்பலியாகத் தெரிவுசெய்யப்பட்டு காரா கிரகம் நாடுகிறார் " என் இப்பதிவிற்கு திரு ரவிசாரங்கன் அவர்களின் எதிர்வினை " " அர்ஜுனன் மகனை ஆணிமுத்து மகனோடு ஒப்பிட்டு கேவல படுத்தக்கூடாது. அர்ஜுனன் மகன் நல்ல செயலுக்காக தீமையை அழித்து உலக நண்மைக்காக பலி கொடுக்கப்பட்டான். ஆணிமுத்து மகன் கெட்டவர்களுக்காக பணிபுரிந்து அக்கெட்டவர்களின் நலனுக்காக பலியாக்கப்பட்டார். ஒருவேளை இவர் சிறையில் இறந்தாலும் அதையும் தங்கள் நலனுக்காக பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்வார்கள் அதோடு ஸ்பெக்ட்ரம் வழக்கும் முடிந்துவிடும் மக்களும் மறந்து விடுவார்கள் ".

Saturday, February 19, 2011

அன்புள்ள மன்னவரே ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள முதல்வருக்கு
ஆனிமுத்து எழுதுவது
அன்பான என் மகனைச் சிறைக்கு
அனுப்பியதற்கு நன்றி

தலைமைக்கு விலைபோய்
தரங்கெட்ட பேரத்தில்
தனித்து நிற்கும் என்மகனைப் பலர்
தவிக்கவிட்டுச் சிரிக்கின்றார்

பங்கு கொண்ட பேரத்தில்
பங்கு பெற்ற பாவிமகன்
பாதகனாய்த் தெரிகின்றான் சிலர்
பரந்தாமனாய், சீதையாய் சித்தரிக்கப்படுகின்றனர்

கருணையும் நிதியுமுள்ள நீங்கள் அவன்
கணக்கை நேர் செய்யுங்கள்
களப்பலியாக்கி கலங்கிட வைக்காதீர்
நிதியையும், நீதியையும் நிலைநாட்டுங்கள்

கைலாசத்தில் கண்ணீரில் க்லங்கிநிற்கும்
அன்புத்தந்தை ஆனிமுத்து

நன்றி புனைவாளர் திரு.எம்.பாலகிருஷ்ணன்
சிவகங்கை

Thursday, February 17, 2011

மத நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் ஒரு கிராமம்- அழகன் குளம்

அழகன் குளம்-- மதநல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

( நன்றி தகவல் தந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த அண்ணன் கோ.மாரி சேர்வை அவர்கள் )

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற இவ்வூர் பழங்காலத்தில் மருங்கூர்ப்
பட்டணம் என அறியப்பட்டது. அழகன் முருகனைக்கொண்ட குளங்கள் நிரம்பிய
ஊர் என்னும் பொரூளில் அழகன் குளம் ஆனது என்கின்றனர்.பழங்காலத்தில்
கிழக்கு மேற்கத்திய நாடுகளுடன் வாணிபத்தொடர்பு வைத்திருந்த துறைமுகம்
தன்னகத்தே கொண்டிருந்தது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் நிரம்பிய இவ்வூரில்
பெரிய பள்ளிவாசல், சேகப்பா, பள்ளிக்கூடத்தில் தர்காக்களுடன் அழகன் நாச்சி அம்மன்
அய்யனார் கருத்த மடை ( ஊர்க்காவல் தெய்வம் ) கோட்டை முனிஸ்வரர், நடராஜர்
மருது பாண்டியகளால் கட்டப்பட்ட ஊர் பெரிய பிள்ளையார் கோவில், அப்பர் முருகன்
கோவிந்தன் பள்ளிக்கூட முனியப்பா என 9 கோவில்களுக்குக் குறைவில்லை.

இந்து முஸ்லிம் ஒற்றுமையில் வலிமைகொண்ட இக்கிராமத்தில் ஒரு முறை
பஞ்சாயத்துத்தலைவர் இஸ்லாமியர் எனில் துணைத்தலைவர் மற்றும் 12 வார்டு
உறுப்பினர்கள் இந்து சமூகத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் இருப்பின் மறுமுறை
பஞ்சாயத்துத்தலைவர் இந்துவாகவும் ஏனையோர் இஸ்லாமியர் ஆகவும் பங்கீட்டு
முறையில் தேர்தல் அல்லாதமுறையில் தெரிந்தக்கப்படுவது ஒரு மரபு
க்டைப்பிடிக்கப்பட்டுவருதல் ஒரு சிறப்பு அம்சமாகும். கிராமத்துக்குள் குப்பைகள், ரோட்டில்
வழிந்தோடும் சாக்கடைகள் ஏதுமே காணக்கிடைக்காது. நோட்டிஸ் ஒட்டினால்
விளம்பரம் எழுதினால் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கைகளைச்
சந்திக்க நேரிடும் என்று இந்து முஸ்லீம் ஐக்கிய சபையின் எச்சரிக்கை போர்டு
முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் திறந்து வைத்த நுழைவு வாயில்
முகப்பில் இருக்கிறது. ஊர் பிரசனைகளுக்கு இரு சமுகத்தினருமே பேச்சுவார்த்தைமூலம்
தீர்வு காண்கின்றனர்.

தற்போது வெற்றிலை, வாழை என விவசாயத்தில் செழிக்கும் இவ்வூர் ஒருகாலகட்டத்தில்
புகையிலை விவசாயத்தில் தழைத்தோங்கியது. ஒரு காலத்தில் இங்கு ஓரு பெரிய
அரண்மனை இருந்து, தற்போது சிதலமுற்று எஞ்சியுள்ள பகுதி மேடாக உருமாறி
தற்போது ' கோட்டை மேடு ' என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறையினர்
இங்கு நடத்திய ஆய்வில் கி.பி,. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர்
பானை ஓடுகள், செங்கற்கள் எனப்பழம் பொருட்களைக் கண்டறிந்து இராமநாதபுரம்
அருங்காட்சியகத்தில் ( இராமலிங்க விலாசம் ) பாதுகாப்பில் வைத்துள்ளனர். வெளிநாட்டுப்
பறவைகளின் வாழ்விடமாகவும் இவ்வூர் உள்ளது. அக்காலத்தில் இராமேஸ்வரம் செல்லும்
யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஏற்ற சத்திரம் கடற்கரையை ஒட்டி இருந்தது, இது
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. அன்று ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்பட்ட
அச்சத்திரம் இடிபாடுகளுடன் காட்சியளித்து ஒரு முருகன் கோவில் மட்டுமே எஞ்சியுள்ளது
கட்டளை பூஜை சிவகங்கை சமஸ்த்தானத்தின்ரால் இப்போதும் மேற்கொள்ளப்பட்டு
வருகிற்து.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவான வைகை நதி இவ்வூரில் வற்றா கழிமுகம்
காண்கிறது. இங்கு ஆண்டு முழுதும் உப்பளத்தொழில் மற்றும் மீன்பிடி தொழில்
சிறந்துவிளங்குகின்றன.

Monday, February 14, 2011

2 ஜி ஊழல் பற்றி சுகனேஷ் உதயசந்திரன்

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்
by Suganesh Udayachandran on Monday, February 14, 2011 at 7:43pm

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.