Thursday, August 27, 2015

ஆவணி அவிட்டம்



இன்று ரிக் வேதியர்களின் ஆவணி அவிட்டம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,,,,,
கவிதார்க்கிக சிம்மம் ஆச்சார்யாலு
தண்டலம் வேங்கடகிருஷ்ண அய்யங்கார்
அநந்த அய்யங்கார்
சடகோபாலாச்சார்லு
சிங்கப்பிரான் தீட்சிதர்
ஸ்ம்ருதி ஐயன் அய்யங்கார்
நித்யானந்த சாஸ்த்திரி
திருமலை சாஸ்த்திரி
யார் இவர்கள்? ராணி மங்கம்மாள்
காலத்தில் ( 1689 AD - 1704 AD )
ஸ்ரீரங்கம் திருச்சி திருவானைக்காவல்
ஆகிய ஊர்களில் வாழ்ந்த புகழ்மிக்க
வேத விற்பனர்கள்
ராணியின் கட்டளைக்கிணங்க கூட்டப்பட்ட
சதஸில் அன்றைய காலகட்டத்தில் இவர்கள்
எடுத்த முடிவு:
மதுரையில் வாழ்ந்த செளராஷ்டிரர்கள்
ஆவணி அவிட்டம் நாளில் பிரம்ம யக்ஞம்
செய்து முப்புரி நூல் ( பூணல் )
தரித்துக்கொள்ள அவர்கட்கு முழு உரிமை
உண்டு அவ்வுரிமை மறுக்கப்பட நியாயம்
இல்லை
ஆதாரம்
பாகை நாடன் எழுதியுள்ள கதை சொல்லும் கல்வெட்டு

No comments: