Wednesday, August 18, 2010

வணக்கம் முருகன் தமிழில் சிறந்த சிறு கதை எழுத்தாளர் இம்மண்ணின் மைந்தர் என்வே அக்கறை காட்டுகிறீர்கள் நன்றி. தாண்டவராயர் 1773ல் மண்ணைவிட்டு மறைகிறார் பின்னரே மருதிருவர் பிரதானிகளாக ஆற்காட்டு நவாபாலும் கும்பெனியாலும் அங்கீகரிக்கப்படுகின்றனர் தாண்டவராயர் காலத்தில் மருது சகோதரர்கள் எவ்வாறு எந்த ஹோதாவில் சிவகங்கையில் செயல்பட்டனர் என்பதற்கு ஆதாரம் கொடுக்க ஆவணங்கள் இல்லை. யூசுப் கான் சிவகங்கைக் கோட்டையை முற்றுகையிட்டார் பின் ஒரு நாளில் கும்பெனியாரால் தூக்கு மேடையேறினார் அவரைக் காட்டிக் கொடுத்தவர்களுள் தாண்டவராய பிள்ளையும் ஒருவர் என்ற செய்தி வியப்பளிக்கவல்லது. பெரிய மருது வேலு நாச்சியார் மண உறவு செவி வழிச் செய்திகள் ஏளாரம். அவற்றைக் கொச்சைப்படுத்தி வரலாறாக்காமல் புதினங்கள் புனையலாம் கோ வி மணி சேரன் போன்று செளமிய ஆண்டு தைத்திங்கள் 13ம் நாள் உடன்படிக்கை மூலம் ராம்நாடு சீமையிலிருந்து பிரிந்து சின்ன மறவர் சீமையை ஆள முழுத்தகுதி பெற்ற நாலுகோட்டை வம்சம் சக்கந்தி வேங்கம் பெரிய உடையணத்தேவர் கும்பெனியால் நாடு கடத்தப்பட்டதோடு முடிய அவர்களுக்குத் தாயாதிக்காரர்களான படமாத்தூர் கெளரி வல்லவர் தன் அண்ணன் மக்களுடன் கும்பெனியாரால் அமைக்கப்பட்ட கீழ் மேல் கோர்ட்டுக்களில் தாவாப் பண்ணிக்கொண்டு 1829ல் காலமானார். அதற்குப்பிறகு எழுந்த வரலாறு வாரிசுரிமைச் சண்டைகளின் வரலாறு வக்கீல்களுக்கு மட்டுமே புரியம் வாதப்ரிதிவாதங்கள். அவற்றின் ஒட்டு மொத்த வரலாறு k.Annaasamy அய்யர் எழுதிய Sivanganga Zemindary Its Origin and Litigation 1730 - 1899ல் படித்துப் பார்க்கலாம், பக்கத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொண்டு

1 comment:

era.murukan said...

நன்றி சார்.

வேலு நாச்சியார் 1730-ல் பிறந்தார் (அந்த ஆண்டுதான், 27.1.1730) சிவகங்கை நகரமும் நிர்மாணிக்கப்பட்டது என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத வரலாற்றுச் செய்திகள்.

நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர் காளையார்கோவில்-கோட்டைமேட்டுப் போரில் வீரமரணம் அடைந்தது 1772-ல். அப்போது நாச்சியார் வயது 42.

அதற்குப் பின் எட்டு ஆண்டுகள் விருபாட்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் இருந்துவிட்டு சிவகங்கை வந்து அரசியாக முடிசூட்டிக் கொள்கிறார். அதாவது 1780-ல். அப்போது அவருக்கு வயது 50.

அதன் பிறகே மருதிருவர் நடைமுறை ஆட்சியாளர்களாகவும்(defacto rulers), வேலு நாச்ச்சியார் சட்டப்படியான அரசியாகவும் (dejure ruler) அரசு நிர்வாகத்தை (பங்கு போட்டோ, கூட்டணி அமைத்தோ) நடத்தியதாக சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரியமருது - வேலுநாச்சியார் திருமணம் நடந்திருந்தால், இந்தக் காலகட்டத்தில் தான் நடந்திருக்க வேண்டும். அப்போது வேலுநாச்சியார் வயது 50-க்கு மேல். ஆனால், 1748-ல் பிறந்த பெரிய மருதுவுக்கு வயது 32,

என்னதான் ராஜதந்திரம் என்றாலும் 50-வயது கடந்த பேரிளம்பெண், தன்னை விட 18 வயது குறைந்த ஒருவரை மணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா?

ஒன்று மேலே குறிப்பிட்ட ஆண்டுக் கணக்கில் பிழை இருக்கவேண்டும். அல்லது இந்தத் திருமணம் (பெருந்திணை?) பற்றிய செய்திகள் வெறும் புனைவுகளாகவே இருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்
இரா.மு