Thursday, August 19, 2010

பெரிய மருது வேலு நாச்சியார் உறவு நிலை

அன்பார்ந்த இரா.முருகன் சிவகங்கை வரலாறுச்சற்றே சறுக்கலான வரலாறு கும்பெனி ஆவணங்கள் பின்நாள் எழுந்த வாரிசு உரிமைக் கோரிக்கை கோர்ட் வரை சென்று கோர்ட் அளித்த தீர்ப்புக்கள் இவற்றைச் சுற்றிச் சுழலும் ஒரு வரலாறு செவி வழிச் செய்திகள் ஏராளம் அச்செய்திகள் புனைவுகளாகக் கூட இருக்கலாம் செவிவழிச் செய்தி சொல்பவர் அதைக் கேட்டு நம்புவோர் இவர்களின் மனப்பக்குவங்களைப் பொறுத்தது அச்செய்திகள் அமைவதால் மட்டுமே வரலாற்றில் திடமான இடத்தைப் பிடிக்க இயலாது அத்தகையகச் செவி வழிச் செய்திதான் பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் உறவு நிலை. பிரதானியான பெரிய மருது நாச்சியாரின் படுக்கை அறைவரை வர அநுமதிக்கப்படுகிறார் எனும் செய்தி விஷமத்தனமான வேண்டுமென்றே ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காக கிளப்பிவிடப்பட்ட வதந்தியென்றே தோன்றுகிறது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான கும்பெனியார் ஏன் இதனைக் கிளப்பிவிடுவதன் மூலம் இரு ஜாதிகளிடையே சிண்டு மூட்டி மருதிருவரையும் அவர் சார்ந்த ஜாதியையும் தனிமைப்படுத்தித் தங்கள் ஆதிக்கத்தை சிவகங்கையில் நிலை நாட்டியிருக்கமுடியாது? பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த கும்பினியார் முந்தானை விரித்தாளும் போக்கிற்கு வித்திட்டிருக்கலாமே

1 comment:

இரா.முருகன் said...

நன்றி சார்.

ஒன்று மட்டும் புரிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியப் பகுதிவரை தென்னிந்திய விடுதலை வீரர்களின் கருதுகோளான 'நாடு' அவர்களின் பிரதேசத்தை மட்டுமே குறிப்பதாக இருந்திருக்கலாம். 1857 முதல் இந்திய விடுதலைப் போர் - சிப்பாய்க் கலகம்- முடிந்தபின் தான் இந்தியா என்ற கருதுகோள் காலத்தின் கட்டாயம் காரணமாக உருவாகி இருக்கிறது போல்.

மருதிருவர், கட்டபொம்மன், பூலித்தேவன், மருதநாயகம், புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி இப்படி யாருமே இதற்கு விதிவிலக்கில்லை. துரோகி, வீரன் போன்ற சொல்லாடல்கள் இதைத் தொடர்பு படுத்தியே புரிந்துகொள்ளப்பட்டால் குழப்பம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.

மேலும் சொல்லுங்கள், படிக்க விருப்பம்

அன்புடன்
இரா.மு