Sunday, February 13, 2011

மரமண்டை

மரமண்டை

1955ல் என் அண்ணன் சென்னைக்கடுத்த திருநின்றவூரில்
TNEB JE ஆக்ச் சேர்ந்து சமைத்துப்போட என் அம்மா சென்றாள். ஒரு வடகலைக்கார அய்யங்கார் ஸ்டோர் வீட்டில் வாசம். ஒரு லீவிற்கு நான் தின்னனூர்சென்றிருந்தபோது வீட்டு உரிமையாளர் வடகலை ராகவ பட்டாச்சாரியார் முன்பு reserve bankக்கு முன்பாக இருந்ததே இம்பீரியல் பாங்க் அதில் அவருக்கு ஆபீசர் வேலை ஆச்சாரக்காரர். நிரம்ப ஆச்சாரம். என் தோப்பனார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த்தால் எங்கள் ஆச்சாரம் குறைவு. ஒரு நாள் சக்கிலியன்க்குச் சோற்றுப்பசையை நான் அவனைத் தொட்டுக்கொடுக்கவே கடும் கோபம் கொண்ட
பட்டாச்சாரியர் என்னை ஏரியில் ஸ்நானம் செய்துவிட்டு வாடா அபிஷ்டு என
ஆணையிட்டு நான் தேர்த்தமாடி வந்தபின்னரே வீட்டினுள் அனுமதித்தார்.
அவ்வளவு ஆச்சாரக்காரர். தேர்த்தமாடிய பின்னரே workers trainல் ஏறுவார்.
பின்னர் தின்னனூர் ஸ்டேஷனில் இறங்கிய பின்னால் தேர்த்தமாடி விட்டுத்
தான் வீட்டினுள் நுழைவார். ஒரு நாள் பெரம்பூர் பக்கம் காய்கறி வாங்க என்னைக் கூட்டிச் சென்றார். அப்போது நாலைந்து ஆங்கிலோ இந்தியப் பெண்களை எனக்குக் காட்டி அவர்களை ஆப்பக்காரிகள் என்று comment அடித்தார். நான் அவரை ஆப்பக்காரிகள் என்றால் என்ன என்று வினவிய போது வயதானபிந்தாண்டா நான் சொன்னது புரியும் என்றார்.


1967 general election கேரள எலக்ஷன் கெளரி தாமஸ் CPM அவர்து கணவர் CPI எலக்ஷன் பிரசாரத்தின் போது கெளரியின் ஆப்பம் எந்தா விசேஷம் என்று
எதிர்க்கட்சியின்ரால் பிரசாரம் செய்யப்பட்டபோதுதான் ஆப்ப்ம் என்றால்
என்ன எனக்குப் புரிந்தது ஆக 1955 முதல் 1967 வரை என் மண்டை
மரமண்டையாக இருந்தது.

No comments: