Sunday, February 20, 2011

ஆணிமுத்து மகனும் அர்ஜுனன் மகனும்...

20 பிப்ருவரி 2011 ஞாயிறு தினமலர் நாளிதழில் இது உங்கள் இடம்
பகுதியில் இடம் பெற்ற கடிதம்:

களப்பலி அரவாண்: கே.இளம்செழியன், இருகூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "யாரையாவது களப்பலி கொடுத்தால் தான், பாரதப் போரில் ஜெயிக்க முடியும்' என, பெரியவர்களும், ஜோதிடர்களும் கூறினர். அர்ஜுனனின் மகனாகிய அரவாணை, இதற்காக தேர்ந்தெடுத்தனர். அவனும் சம்மதித்தான். ஆனால், தான் இறக்கும் முன், எல்லாவித சுக போகங்களையும் அனுபவித்துவிட்டுத் தான் இறப்பேன் என்றான். அதனால், மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணன், அவனை மணந்து கொள்ள, அந்த மோகினியுடன், இஷ்டம் போல சுகித்து மகிழ்ந்தான். இந்த சம்பவத்தை, இன்றும் கூவாகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கு, உலகெங்குமுள்ள அரவாணிகள் வந்து, கூவாகத்தில் கூடுகின்றனர். அதேபோல, வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க, தி.மு.க., அணிக்கு ஒரு அரவாண், களப்பலியாக தேவைப்பட்டான். அதுதான் முன்னாள் அமைச்சர் ராஜா. அவரைக் களப்பலியாக சி.பி.ஐ., சிறையில் அடைத்துவிட்டு, காங்கிரசும், தி.மு.க.,வும், தேர்தல் போரில் ஜெயித்து விடலாம் என திட்டம் வகுக்கின்றன; கனவு காண்கின்றன. ராஜா ஊழல் செய்தார் சரி... ஆனால், அந்த பணத்தில் லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்? ஸ்பெக்ட்ரம் பணம் பாயாத இடம் ஏது?
கூனிக் குறுகி வாழ்வதா?

இக்கடித்திற்கான என் எதிர்வினை:

" அன்று அர்ஜுனனின் மகன் அரவாண் களப்பலி
இன்று ஆணிமுத்து மகன் களப்பலி
ஒப்பீடு என்னவோ உண்மைதான்.
ஆணிமுத்து மகன், அர்ஜுனனின் மகனிடமிருந்து
ஒரு விஷயத்தில் வேறுபடுகிறார்.

அர்ஜுனனின் மகன், தான் களப்பலியாகப்போகிறோம்
என்று அறிந்தபின்னரே மோஹினியை நாடுகிறான்.

ஆணிமுத்து மகனோ மோஹினியை நாடி, அதன் விளைவாகவே
களப்பலியாகத் தெரிவுசெய்யப்பட்டு காரா கிரகம் நாடுகிறார் " என் இப்பதிவிற்கு திரு ரவிசாரங்கன் அவர்களின் எதிர்வினை " " அர்ஜுனன் மகனை ஆணிமுத்து மகனோடு ஒப்பிட்டு கேவல படுத்தக்கூடாது. அர்ஜுனன் மகன் நல்ல செயலுக்காக தீமையை அழித்து உலக நண்மைக்காக பலி கொடுக்கப்பட்டான். ஆணிமுத்து மகன் கெட்டவர்களுக்காக பணிபுரிந்து அக்கெட்டவர்களின் நலனுக்காக பலியாக்கப்பட்டார். ஒருவேளை இவர் சிறையில் இறந்தாலும் அதையும் தங்கள் நலனுக்காக பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்வார்கள் அதோடு ஸ்பெக்ட்ரம் வழக்கும் முடிந்துவிடும் மக்களும் மறந்து விடுவார்கள் ".

No comments: