Thursday, February 17, 2011

மத நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் ஒரு கிராமம்- அழகன் குளம்

அழகன் குளம்-- மதநல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

( நன்றி தகவல் தந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த அண்ணன் கோ.மாரி சேர்வை அவர்கள் )

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற இவ்வூர் பழங்காலத்தில் மருங்கூர்ப்
பட்டணம் என அறியப்பட்டது. அழகன் முருகனைக்கொண்ட குளங்கள் நிரம்பிய
ஊர் என்னும் பொரூளில் அழகன் குளம் ஆனது என்கின்றனர்.பழங்காலத்தில்
கிழக்கு மேற்கத்திய நாடுகளுடன் வாணிபத்தொடர்பு வைத்திருந்த துறைமுகம்
தன்னகத்தே கொண்டிருந்தது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் நிரம்பிய இவ்வூரில்
பெரிய பள்ளிவாசல், சேகப்பா, பள்ளிக்கூடத்தில் தர்காக்களுடன் அழகன் நாச்சி அம்மன்
அய்யனார் கருத்த மடை ( ஊர்க்காவல் தெய்வம் ) கோட்டை முனிஸ்வரர், நடராஜர்
மருது பாண்டியகளால் கட்டப்பட்ட ஊர் பெரிய பிள்ளையார் கோவில், அப்பர் முருகன்
கோவிந்தன் பள்ளிக்கூட முனியப்பா என 9 கோவில்களுக்குக் குறைவில்லை.

இந்து முஸ்லிம் ஒற்றுமையில் வலிமைகொண்ட இக்கிராமத்தில் ஒரு முறை
பஞ்சாயத்துத்தலைவர் இஸ்லாமியர் எனில் துணைத்தலைவர் மற்றும் 12 வார்டு
உறுப்பினர்கள் இந்து சமூகத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் இருப்பின் மறுமுறை
பஞ்சாயத்துத்தலைவர் இந்துவாகவும் ஏனையோர் இஸ்லாமியர் ஆகவும் பங்கீட்டு
முறையில் தேர்தல் அல்லாதமுறையில் தெரிந்தக்கப்படுவது ஒரு மரபு
க்டைப்பிடிக்கப்பட்டுவருதல் ஒரு சிறப்பு அம்சமாகும். கிராமத்துக்குள் குப்பைகள், ரோட்டில்
வழிந்தோடும் சாக்கடைகள் ஏதுமே காணக்கிடைக்காது. நோட்டிஸ் ஒட்டினால்
விளம்பரம் எழுதினால் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கைகளைச்
சந்திக்க நேரிடும் என்று இந்து முஸ்லீம் ஐக்கிய சபையின் எச்சரிக்கை போர்டு
முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் திறந்து வைத்த நுழைவு வாயில்
முகப்பில் இருக்கிறது. ஊர் பிரசனைகளுக்கு இரு சமுகத்தினருமே பேச்சுவார்த்தைமூலம்
தீர்வு காண்கின்றனர்.

தற்போது வெற்றிலை, வாழை என விவசாயத்தில் செழிக்கும் இவ்வூர் ஒருகாலகட்டத்தில்
புகையிலை விவசாயத்தில் தழைத்தோங்கியது. ஒரு காலத்தில் இங்கு ஓரு பெரிய
அரண்மனை இருந்து, தற்போது சிதலமுற்று எஞ்சியுள்ள பகுதி மேடாக உருமாறி
தற்போது ' கோட்டை மேடு ' என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறையினர்
இங்கு நடத்திய ஆய்வில் கி.பி,. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர்
பானை ஓடுகள், செங்கற்கள் எனப்பழம் பொருட்களைக் கண்டறிந்து இராமநாதபுரம்
அருங்காட்சியகத்தில் ( இராமலிங்க விலாசம் ) பாதுகாப்பில் வைத்துள்ளனர். வெளிநாட்டுப்
பறவைகளின் வாழ்விடமாகவும் இவ்வூர் உள்ளது. அக்காலத்தில் இராமேஸ்வரம் செல்லும்
யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஏற்ற சத்திரம் கடற்கரையை ஒட்டி இருந்தது, இது
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. அன்று ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்பட்ட
அச்சத்திரம் இடிபாடுகளுடன் காட்சியளித்து ஒரு முருகன் கோவில் மட்டுமே எஞ்சியுள்ளது
கட்டளை பூஜை சிவகங்கை சமஸ்த்தானத்தின்ரால் இப்போதும் மேற்கொள்ளப்பட்டு
வருகிற்து.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவான வைகை நதி இவ்வூரில் வற்றா கழிமுகம்
காண்கிறது. இங்கு ஆண்டு முழுதும் உப்பளத்தொழில் மற்றும் மீன்பிடி தொழில்
சிறந்துவிளங்குகின்றன.

No comments: